யாழ்ப்பாணம் காரைநகர் – பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (மயில்) நேற்றிரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.