தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 06 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும்.  

இது மேலும் படிப்படியாக வலுவடைந்து ஒரு சூறாவளி புயலாக மாறி, டிசம்பர் 08-ம் தேதிக்குள் வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும்.

 இந்த அமைப்பின் தாக்கத்தின் கீழ், டிசம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.