ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மனியின் 16 மாகாணங்களில், 11 மாகாணங்களில் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியதில் ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Reich Citizens movement என்ற அமைப்பைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து ஜேர்மனி முழுவதும் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள், போருக்குப் பிந்தைய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆவர்.

அவர்கள் ஜேர்மனி அரசைக் கவிழ்க்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.