யாழ்.குப்பிளான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குப்பிளான் – தயிலங்கடவைப் பகுதியில் ஹெரோயின் வியாபாரம் செய்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

சந்தேகநபரான பெண் சுமார் 130 கிராம் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் என்பன சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.