பஸ் நிலையத்தில் பஸ்ஸின் முன் சக்கரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நுவரெலியா சாந்திபுர அளுத் தொகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.ஏ.ரோஹித உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நுவரெலியாவில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவரே தனது தேவைக்காக நுவரெலியா பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றதை அடுத்து, விபத்து தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு நுவரெலியா வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதியை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.