பிரித்தானியாவில் கிரந்தத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி செல்லும் சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையடித்த நபருக்கு ஊழியர்கள் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் கூடை முழுவதும் பொருட்களை எடுத்துக் கொண்டு பணம் செலுத்தாமல் தப்பி செல்ல முயன்றுள்ளார்.

Hornsby வீதியில் உள்ள Costcutter கடையின் அலமாரிகளில் இருந்து 50 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை ஒரு கூடைக்குள் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் வெளியேறும் பாதையை நோக்கி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் நடந்து செல்வதனை கடையில் பணியாற்றிய Mathan Sabba என்பவர் அவதானித்துள்ளார்.

எனினும் கொள்ளையன் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக செயற்பட்ட அவர் கொள்ளையனுடன் மல்லுக்கட்டியுள்ளார். 

கொள்ளையனின் கூடையை Mathan Sabba துணிச்சலுத்துடன் பறித்து எடுத்துள்ளார். எனினும் பொருட்களின்றி கொள்ளையன் தப்பி சென்றுள்ளார்.

பல வருடங்களாக கடைக்கு வரும் அந்த நபரை தங்களுக்கு தெரியும் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

“இந்த நபர் தினமும் வருவார். ஆனால் இனி அவர் திரும்பி வரமாட்டார் என்று நம்புகிறேன், ஏனென்றால் நாங்கள் அவரைப் பார்த்துவிட்டோம்” என Mathan Sabba கூறியுள்ளார்.

அவர் அடிக்கடி உள்ளே வந்து பியர் எடுத்துக் கொள்வார். அதற்கு அடுத்த நாள் பணம் தருவார் என சபா குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபரிடமிருந்து கூடையை எடுக்க முயன்றபோது Mathan Sabbaவின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரே நாளில் மூன்று கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்ததாக அவர் கூறினார். 70 முதல் 130 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களைக் கொண்ட கூடைகளுடன் திருடர்கள் தப்பிச் சென்றனர்.

கடை உரிமையாளர் குமணன் நடராஜா என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கூறுகையில், கடையில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், எப்போதும் இல்லாத அளவுக்கு அடிக்கடி திருட்டு நடப்பதாகவும் தெரிவித்தார். “எனக்கு அது சலித்து விட்டது. விலைகள் அதிகரிக்கின்ற நிலையில் அவ்வாறு எங்கள் பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள். இது எளிதானது அல்ல” என அவர் நடராஜா மேலும் தெரிவித்துள்ளார்