உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
நேற்று இ;டம்பெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் போட்டியிட்டன.
ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹேரி கேன் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்
ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரரான ஒலிவர் கிரௌட் தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியை முன்னிலை பெறச்செய்தார்.
இதன் பின்னர் இங்கிலாந்து கோல் அடிக்க முயற்சித்தாலும் அது பயனளி;க்கவில்லை.
இந்தநிலையில் இங்கிலாந்து அணி போட்டியில் தோல்வி கண்டது.
முன்னதாக மொரொக்கோ அணி, போர்த்துக்கல் அணியை 1-0 என்ற கோல் அடிப்படையில் தோற்கடித்து முதல் தடவையாக உலக கிண்ண கால்பந்து அரையிறுதியில் நுழைந்தது.
இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது