வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவதாக கூறி தொலைபேசி வழியாக 9500 ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடமே குறித்த 9500 ரூபாய் பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.உடுவிலில் உள்ள ஒரு வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்து தாம் வவுனியாவில் இருந்து பேசுறன் பாரி அறக்கட்டளையில் பணிபுரிவதாகவும் தாம் கஸ்டப்பட்ட பிள்ளைகளுக்கு மாதம் மாதம் உதவி செய்வதாகவும் 28 பேரின் பெயர் விபரம் கிடைத்துள்ளதாகவும் இன்னும் 2 பேரின் பெயர் விபரம் தேவை என கோரியுள்ளார்.

இதன்போது அந்த வீட்டில் தொலைபேசியில் பேசி பெண் எப்படி இந்த இலக்கம் தெரியும் எப்படி தொடர்பு கொண்டது என கேட்க தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் பேசி ஒவ்வொரு இலக்கமும் எடுத்ததாக கூறியுள்ளார்.

உதவித்திட்டத்தில் தமிழருவி சிவகுமார் அவர்களது பெயரையும் கூறியுள்ளார். இதனையடுத்து நீங்கள் உங்களின் இலக்கத்தை தாருங்கள் கிராம சேவையாளரிடம் கொடுத்து வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிள்ளைகளின் விபரம் எடுத்த பின் உங்களுக்கு அழைப்பெடுப்பதாக அந்த வீட்டுப் பெண் அவருக்கு தெரிவித்தார்.

இதன்போது தொலைபேசியில் பேசிய மர்ம நபர் கிராம சேவையாளரிடம் கேட்கவேண்டாம் அவர்கள் தமக்கு ஆதரவான ஆட்களையும், அரசியல் பின்புலத்தை பயன்படுத்துவார்கள்.

நீங்கள் உங்களுக்கு தெரிந்த இருவரின் இலக்கத்தை தருமாறு கோரியுள்ளார்.இதனை நம்பிய பெண் வறுமைக்கோட்டுக்குட்பட்ட இருவரது இலக்கங்களை கொடுத்துள்ளார் ஒருவர் யாழ்ப்பாணம் மற்றையவர் மன்னார்.

இதையடுத்து இவர்கொடுத்த இரு இலக்கங்களில் யாழ்ப்பாணத்து தொலைபேசி இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்ட மற்றொரு நபர் தான் ஒரு மருத்துவ மாணவன் எனவும் தனக்கு அப்பா அம்மா இல்லை.

அம்மாவின் அந்தியேட்டி அவரின் நினைவு உதவியாக உங்களுக்கு நிதியுதவி செய்வதாக கூறியுள்ளார். நீங்கள் ஏ.ரி.எம். க்கு வாருங்கள் அதற்கு முதல் நிதி உதவிக்கு நீங்கள் போன் இலக்கத்துக்கு 0743244621 ez cash இலக்கத்தக்கு 9500 ரூபா அனுப்பிவிடுமாறு கோரியுள்ளார்.

பின்னர் உங்களுக்கு வழங்கும் பணத்துடன் சேர்த்து தருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே அந்த குடும்பம் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் இவ்வாறு இருக்கையில் நிதி கிடைக்கும் என்பதனை நம்பி கார்கில்ஸ் பூட்சிற்றியில் குறித்த இலக்கத்துக்கு 9500 ரூபாவினை ez cash செய்துள்ளனர்.

பின்னர் காசு அனுப்பிய விடயத்தை கூற பலமுறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் தொலைபேசி இயங்கவில்லை. சில தொலைபேசி நிறுவனங்கள் போட்டிக்கு வீதிகளில் sim அட்டைகளை விற்கும்போது பதிவற்ற நிலையில் sim அட்டைகளை விற்கின்றனர்.

இது இவ்வாறான களவு மோசடிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளன தற்போது பொருளாதார பிரச்சினையில் பலர் கஷ்டப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பொய் மோசடி செய்து ஒரு வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அழித்துள்ளதுடன் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தையும் இழந்துள்ளனர்.