அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

26 வயதான Rachel McCrow மற்றும் 29 வயதான Matthew Arnold என அடையாளம் காணப்பட்ட இரண்டு கான்ஸ்டபிள்கள், Wiembilla என்ற சிறிய நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், காணாமல் போன நபர் தொடர்பான விசாரணைக்காக சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பின்னர், அதே இடத்தில் மூன்று சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். பொலிசார் அந்த இடத்திற்கு வருவதற்குள் ஒருவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

திங்கள்கிழமை மாலை 4:45 மணியளவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வியாம்பில்லாவில் உள்ள வீட்டிற்கு நான்கு அதிகாரிகள் வந்தபோது வன்முறை தொடங்கியதாக காவல்துறை கூறுகிறது.

சோதனை செய்ய முற்பட்டபோது, குறைந்தது இரண்டு துப்பாக்கிச் சூடுக்காரர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிலுக்கு, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் இரண்டு அதிகாரிகள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், அருகில் இருந்த மற்றோரு நபர் (ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரர்) துப்பாக்கிச் சண்டையின் போது கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.