கொழும்பு – புதுக்கடை வீதியில் இன்று பிற்பகல் தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது.

உணவகமொன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

எனினும் உணவகத்தில் காணப்பட்ட பொருட்கள் பல தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

தீவிபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.