ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு தனது முதல் மின்சார காரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருப்பதன் காரணமாக மின்சார கார்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் வெளிநாட்டில் போலவே இந்தியாவிலும் தற்போது மின்சார கார்களுக்கு அதிக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மின்சார கார் 2026ஆம்  ஆண்டு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த கார் சுமார் 80 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த காரில் மற்ற மின்சார கார்களை விட அதி நவீன அம்சங்கள் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன