வவுனியா, குடாகச்சக்கொடியில்   சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குடாகச்சக்கொடிய  மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞர் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

குடாகச்சகொடிய மேதாமாவத்தையை சேர்ந்த 25 வயதுடைய உமேஸ் லக்சன் என்கிற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.