சுவிஸில் சிறுவர்களை அறைந்தால் கடுமையான தண்டணை.!! சுவிட்சர்லாந்தில் சிறுவர்களை அறைவது, உதைப்பது போன்றன குற்றச் செயல் என விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற்றுள்ளது.

சிறுவர்களை உடல் உள ரீதியாக தாக்குதல், தண்டித்தல் மற்றும் துஸ்பிரயோகம் செய்தல் என்பன சட்டவிரோதமானது என்பதனை உள்ளடக்கி சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேசிய பேரவை, சமஷ்டி பேரவையிடம் கோரியுள்ளது.

சுவிஸில் சிறுவர்களை அறைந்தால் கடுமையான தண்டணை.!!
இந்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.

எவ்வாறெனினும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் திருத்தங்கள் செய்ய முடியாது என நீதி அமைச்சர் கய்ரன் கெல்லர் சூட்டர் தெரிவித்துள்ளார்.