• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம்.

Dez 16, 2022

மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு  ஆலயங்களில்  சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் தேவஸ்தானத்திலும் திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம் இடம்பெற்றது.

அதிகாலை வேளை,  தேவஸ்தான நடை திறக்கப்பட்டு கருவறையில் வீற்றிருக்கும் சங்கு, சக்கரதாழ்வார் மற்றும் திருப்பாவை ஆண்டாளுக்கு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

இவ் உற்சவம் கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பி.கண்ணதாசன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம் 16.12.2022, ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஆண்டு 15.01.2023 வரை இடம்பெற்று இனிதே நிறைவடையும்.

இந்த நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு திருப்பாவை அருட்கடாச்சத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed