கத்தார் நாட்டில்  நடந்து வரும் 22 வது உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மொராக்கோவை வீழ்த்தி குரோஷியா வெற்றி பெற்றுள்ளது.

கத்தார் நாட்டில்  நடந்து வரும் 22 வது உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள், நாக்அவுட்    சுற்றுகள், காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகள் முடிந்து  நாளை இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. நாளை பிரான்ஸ் – அர்ஜென்டினா போட்டி நடக்கவுள்ளது.

எனவே, இன்று 3 வது இடத்திற்கான போட்டி குரோஷியா- மொராக்கோ  அணிகளுக்கு இடையே நடந்தது.

இதில்,  குரோஷியா 2 கோல்களும், மொராக்கோ 1 கோலும் அடித்தன. எனவே குரோஷியா 2-1 என்ற கணக்கில் 3 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.