• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதி

Dez 17, 2022

100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நாடு முழுவதும உள்ள 100 கல்வி வலயங்கள், 120 கல்வி வலயங்களாக அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

இவ்வாறு கல்வி வலயங்களை அதிகரித்ததன் பின்னர் ஆசிரியர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இலகுவாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed