யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணமல்போயுள்ளார்.

காணமல்போன கடற்றொழிலாளரை அப்பகுதிமக்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கவுண்ட நிலையில் அவரை தேடிச்சென்ற படகினால் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்துள்ள நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஞாயிற்றுகிழமை (18) பலாலியிலிருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பலாலி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.