திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (21-12-2022) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ததாகவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.