2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் முக்கிய மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஜனவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் மின்கட்டணம் உயர இருக்கிறது. எவ்வளவு உயர்வு என்பது, நீங்கள் வாழும் மாகாணத்தைப் பொருத்து மாறுபடும்.

கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் மிக உயர்ந்த கட்டண அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை ஜனவரி முதல் சராசரியாக 6.6 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.

மேலும், நீங்கள் வாடகை வீட்டில் வாழ்பவரானாலும் சரி, வீட்டு உரிமையாளரானாலும் சரி, வாடகை மற்றும் வீட்டுக்கடனுக்கான மாதாந்த தவணை ஆகியவை உயர இருக்கின்றன.