• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கரும்புள்ளிகளை மறையச்செய்யும் குங்குமாதி தைலம்

Dez 22, 2022

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவிவிடலாம். எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும்.

குங்குமாதி தைலம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

இது சருமத்திலுள்ள இறந்தசெல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும்.

அசல் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தினால் முகம், முழு நிலவுபோல மாறும் என்று யோகரத்னகர ஆயுர்வேத நூல் சொல்கிறது. குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைந்து விடும். இது பருக்களுக்கும், பருக்களால் ஆன கரும்புள்ளிகளுக்கும் மிகச்சிறந்த எதிரியாகும்.

இந்தத் தைலத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள் மறைந்து முகத்திற்கு ஒரு நல்ல பிரகாசமான ஒளி கிடைக்கும். உதடு சிவப்பாக மாற குங்குமாதி தைலத்துடன் சில துளி தேங்காய் எண்ணெய் சேர்த்து இரவில் உதட்டில் தடவி வரவேண்டும்.

காலையில் உதட்டை கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படுவதை காணலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed