சுவிஸ் சூரிச், இல் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விநியோகம் செய்தவர் கைது.!, மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் இல்லாமல் பயணித்த ஒருவரை பிடித்த பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

திங்கட்கிழமை இரவு, Zurich இல், தனது மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் இல்லாமல் பயணித்த 22 வயது இளைஞர் ஒருவரை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

அவர்கள் ஹெட்லைட்டை போட்டுச் செல்லும்படி கூறத்தான் அவரை நிறுத்தினார்கள். ஆனால், அவர் நிற்காமல் வண்டியைத் திருப்பி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

சந்தேகமடைந்த பொலிசார், உடனே அவரைத் துரத்திச் சென்று பிடித்துள்ளார்கள். அப்போது அவரிடம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார். அத்துடன், அவரிடம் 4,000 சுவிஸ் ஃப்ராங்குகள் ரொக்கமும் இருந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.