கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு வீட்டின் உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் 5,000 ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயம், தங்கம் மற்றும் கைத்துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேசமயம் சந்தேக நபர் வீட்டிற்குள் நுழையும் காட்சியும் அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.