• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த தாயும். குழந்தையும்!

Dez 22, 2022

மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயார் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் திங்கட்கிழமை (19-12-2022) பதிவாகியுள்ளது.

எத்திமலை – கும்புக்கேயா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப் பிரவசித்த போதே, உயிரிழந்தள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரசவத்துக்காக சியம்பலாண்டுவ ஆரம்ப வைத்தியசாலையில் 18ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பின்னர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்ப்பட்டு, அங்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்து சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தாயும் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed