• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான மகிழ்ச்சி தகவல்.

Dez 22, 2022

பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன.

அந்த வரிசையில் பிரான்ஸைப் பொருத்தவரை புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும். 

ஆனால், பணியாளர் தட்டுப்பாடு காரணமாக பிரான்ஸும் தனது புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்கள் எளிதில் பிரான்ஸில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புலம்பெயர்தல் விதிகளை மாற்றவும் திட்டம் உள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin மற்றும் தொழிலாளர் துறை அமைச்சரான Olivier Dussopt ஆகிய இருவரும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், புலம்பெயர்தல் தொடர்பிலான புதிய சட்ட வரைவு 2023 துவக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

இதன் காரணமாக பிரான்ஸிற்கு புலம்பெயர மற்றும் வேலை வாய்ப்பை பெற முயற்சிப்போருக்கு இது நல்ல சந்தர்ப்பம் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed