அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை (21) அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பினை மறைத்து வைத்திருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் ஆயிரத்து ஐந்நூறு மில்லிலீட்டர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு கைது நடவடிக்கைகளும் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.