ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்று கின்னஸ் சாதனை செய்து உள்ள பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவம் ஆன நிலையில் அவருக்கு அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது. அனைத்து குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிரசவம் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த பெண்ணுக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுக்க போவது குறித்து அந்த பெண்ணுக்கு தெரியவில்லை என்றும்  டாக்டர்களும் அவரது அவரை பரிசோதனை செய்து ஏழு குழந்தைகள் வரை பிறக்கலாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதற்கு முன் 2009 ஆம் ஆண்டு 8 குழந்தைகள் பிறந்ததே கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில் தற்போது இந்த பெண் 9 குழந்தைகளைப் பெற்று சாதனை செய்துள்ளார்.