• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் சீரற்ற காலநிலை. பரிதாபமாக உயிரிழந்த இருவர்

Dez 25, 2022

கண்டி – அக்குறணை – துனுவில பிரதேசத்தில் இருவர் உயிரழந்துள்ளனர்.
 
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரன், சகோதரி உயிரிழந்துள்ளனர்.
 
கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 
சம்பவத்தின் போது வீட்டில் இறந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்ற சகோதரர் என ஐந்து பேர் இருந்தனர். 
 
அவரும் மண் மேட்டின் கீழ் விழுந்து படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
எனினும் இந்த விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed