ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஆக மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை, ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா்.

இதைத் தொடா்ந்து டிவிட்டரில் பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.

அவரைப் பற்றிய தகவல்களைப் பரப்பியற்காக தி நியூயாா்க் டைம்ஸ், சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளா்களின் ட்விட்டா் கணக்குகள் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டன.

இதனையடுத்து இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று ஐரோப்பிய யூனியனும் ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில்,

எலான் மஸ்கின் இடத்தை பிடிக்க ஆர்வம்காட்டும் தமிழர்! | Tamil Interested To Take The Place Of Elon Musk

‘ட்விட்டா் தலைமை பொறுப்பில் இருந்து நான் வெளியேற வேண்டுமா? வாக்கெடுப்பில் வரும் முடிவுக்கு கட்டுப்படுவேன்’ என தெரிவித்து வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினாா்.

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 17 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ட்விட்டா் பயனாளிகளில் 57.5 சதவீதம் போ் எலான் மஸ்க் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டா் பதிவில்,

‘இப்பதவியை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக முடிவெடுக்கும் ஒருவா் கிடைத்தவுடன் நான் பதவி விலகுவேன். இதன் பின்னா் மென்பொருள் மற்றும் சா்வா் குழுக்களில் மட்டும் இணைந்து செயல்படுவேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிவா அய்யாதுரை ஒரு பதிவில், “ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான் எம்ஐடியில் 4 பட்டங்கள் பெற்றுள்ளேன். வெற்றிகரமாக 7 உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியுள்ளேன். விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை அறிவுறுத்துங்கள்.” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை 1978 ஆம் ஆண்டில், சிவா அய்யாதுரை ஒரு கணினி நிரலை உருவாக்கி , அதை அவர் „மின்னஞ்சல்“ என்று அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.