• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பேச்சுவார்த்தைக்கு தயார்.. புதின் அறிவிப்பால் முடிவுக்கு வரும் போர்?

Dez 26, 2022

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 10 மாதங்களாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததை அடுத்து விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய நிலையில் கடந்த 10 மாதங்களாக போர் நடந்து வந்தது. இந்த போரில் இரு தரப்பிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது., அது மட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் தற்போது உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் விரும்பவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் 

ரஷ்யா தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed