கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்து, வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 152 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்றிரவு இவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு திரும்பியவார்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் வாழ முடியாத நிலைமை காணப்படுவதாக கூறி, 302 இலங்கையர்கள் மியன்மார் வழியாக கனடா செல்ல முயற்சித்திருந்தனர்.
சட்டவிரோதமாக கடல் வழியாக சென்ற வேளையில், படகு விபத்துக்குள்ளாகியிருந்தது. இதன்போது, குறித்த இலங்கையர்கள் வியட்நாம் அதிகாரிகளினால் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
மேலும் காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 152 பேர் நாடு திரும்பியுள்ளனர்.