• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு புலம்பெயர்ந்தோருக்கு அரிய வாய்ப்பு!

Dez 29, 2022

கனடாவில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் வீட்டுவசதி அமைச்சர் அகமது ஹசென் தெரிவித்துள்ளார்.

கனடாவின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், குடியிருப்புகளின் தேவை உயர்ந்துள்ளதால் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் கனடாவில் நிரப்பப்படாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஹசென், இதனால் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர்கள், தொழில் திறமை மிகுந்த புலம்பெயர்ந்தோர் தேவை எனவும், நிரப்பப்படாமல் உள்ள வேலை வாய்ப்பை நிரப்பவும், அத்துடன் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் எங்களுக்கு உதவ முன்வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

அதிக தொழிலாளர்கள் தேவை என்பதால், கனேடியர்களுக்கு குடியிருப்புகளின் தேவை இருப்பதால், வந்து எங்களுக்கு உதவுங்கள் என அமைச்சர் ஹசென் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு 500,000 பேர் கனடாவுக்கு வருவதை பெடரல் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் அறிவித்திருந்தார்.

இருப்பினும், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பால் குடியிருப்பு பிரச்சனையும் அரசாங்க சேவைகளை பெறுவதில் சிக்கலும் ஏற்படும் என பெரும்பாலான கனேடிய மக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், வீட்டுவசதி, சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கான அதிகப்படியான தேவை ஏற்படும் என கனேடிய மக்கள் குறிப்பிட்டிருந்தனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed