பிரிட்டன் தலைநகர் லண்டனில் தமது காரில் இருந்து சிகரெட் ஒன்றை வெளியே தூக்கி வீசிய பெண்ணிற்கு 6.5 லட்சம் அபராதம் விதித்து நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் முழுவதும் இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையிலேயே, சிகரெட் ஒன்றை தூக்கி வீசியதற்காக இலங்கை மதிப்பில் 6.5 லட்சம் (1504£) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பார்கிங் மற்றும் டேகன்ஹாம் கவுன்சில் நிர்வாகமே தொடர்புடைய கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1990 பிரிவு 87ன் கீழ் பொதுவெளியில் குப்பை கொட்டுவது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

சம்பவத்தின் போது அந்த வாகனத்தின் சாரதி யார் என்பதை உறுதி செய்ய தவறியதை அடுத்து, Bateesa என்ற பெண்னுக்கு 1504 பவுண்டுகள் அபராதமாக விதித்துள்ளனர்.

ஒரு சிகரெட் துண்டு அல்லது ஒரு கருப்பு பையை பொதுவெளியில் வீசினாலும், அது குப்பை கொட்டுவதற்கு ஒப்பான செயல் என பார்கிங் மற்றும் டேகன்ஹாம் கவுன்சில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.மேலும், தங்கள் மாவட்டத்தை குப்பைகளை குவிக்கும் இடமாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள நிர்வாகம், குறித்த பெண் செய்து குற்றவியல் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.