அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்துள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்தன.

குளிர்கால பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிய நிலையில், ஏரிகள், ஆறுகள் உறைந்துள்ளன.

அமெரிக்கா – கனடாவின் எல்லையில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலும் பனிப் பாறையாக உறைந்துள்ளது.

மேலும் சில இடங்களில் மட்டும் பனிப்பாறைக்கு கீழ்ப்பகுதியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.