மக்கள் பண்டிகை கொண்டாடும் மன நிலையில் இருக்கும் நிலையில், பயணம் செய்யவேண்டாம் என பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.50 மில்லிமீற்றர் அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்பதால் உயிருக்கு ஆபத்து நேரிடவாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

ஸ்கொட்லாந்து எல்லைகள் முதல் பல்வேறு இடங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 40 முதல் 50 மில்லிமீற்றர் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருமழையின் விளைவாக வேகமாகப் பாயும் வெள்ளம் மற்றும் பெருவெள்ளம் ஏற்படலாம் என்றும், அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

அத்தியாவசிய காரணம் இருந்தால், முன்கூட்டியே திட்டமிடுமாறும், வாகனத்தில் போதுமான எரிபொருளும், உணவு, தன்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும்,மொபைல் போன்களை சார்ஜ் செய்துவைத்துக்கொள்ளுமாறும், நிலைமைக்கேற்றவாறு கவனமாக பயணிக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.