• Sa. Okt 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானிய ஆலயமொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Dez 31, 2022

பிரித்தானிய ஆலயமொன்றில் ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு பட்டப்பகலில் திகில் அனுபவம் கிடைத்துள்ளது.

யார்க்‌ஷையரைச் சேர்ந்த அண்டி பொல்லார்ட் எனும் நபருக்கே இந்த திகில் அனுபவம் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், லீட்ஸிலுள்ள Kirkstall Abbey என்னும் பழங்கால துறவிகள் மடத்துக்கு அண்டி பொல்லார்ட் சென்றுள்ளார்.

வெளிச்சம் நன்றாக இருக்கும் மதிய நேரத்தில், ஆவிகள் நடமாட்டத்தை உணரும் கருவிகளுடன் அண்டி பொல்லார்ட் அந்த மடத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த பயன்பாட்டில் இல்லாத சிற்றாலயம் ஒன்றிற்குள் அவர் நுழைந்திருக்கிறார். அதற்குள் நுழைந்ததும், அவரது கருவி, அங்கு ஆவிகள் நடமாட்டம் பலமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அங்கு நடப்பவை முழுவதையும் பதிவு செய்துகொண்ட அண்டி பொல்லார்ட், பின்னர் அவற்றை இயக்கிப்பார்க்க, அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

ஆம், ஒரு ஒலிப் பதிவில்,வெளியே போ என யாரோ சத்தமிடுவது போன்று பதிவாகியுள்ளது.

இதனால், இன்னொருமுறை சென்று அந்தக் கட்டிடத்தை ஆராய்வது என அண்டி பொல்லார்ட் முடிவு செய்துள்ளார்.

அந்தக் கட்டிடம் 1070ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1152 முதல், 1538ஆம் ஆண்டு வரை துறவிகள் மடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed