ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீர்கொழும்பில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தாண்டுக்கான ஆடைகளை வாங்குவதற்காக கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும் 17 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஓட்டோ சாரதியும் அதில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.