தமிழகத்தில் மழை முடிந்து வறண்ட வானிலை இனி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் 5 ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு என கூறப்பட்டதை அடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது