உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் இலங்கையில் புதிய வருடத்தில் தங்கவிலை உச்சம்தொட்டுள்ளது.
அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,618. ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,700 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வு இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.