உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டில் கடுமையான காலநிலை மாற்றம் ஏற்படும் என்று நாசா  எச்சரித்துள்ளது.

இதற்கமைய பல நாடுகள் அதிக வெப்பநிலை, காற்று, காட்டுத் தீ மற்றும் கடுமையான வறட்சியை ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் ஏற்படக்கூடிய இந்த காலநிலை மாற்றங்களுக்கு நாடுகள் தயாராக இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உலகில் 15 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருடம் நிகழும் காலநிலை மாற்றம் மிகவும் ஆபத்தானது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.