வவுனியாவில் உள்ள தமிழ் வர்த்தகர் ஒருவர் குடும்பத்தோடு கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் புதுவருடமான நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சம்பவம் வவுனியா – வைரவப்புளியங்குளம் முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தேவையின் நிமித்தம் வீட்டிலுள்ள அனைவரும் கொழும்புக்கு சென்றிருந்த சமயத்தில் திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து பணம் மற்றும் நகை ஆகியவற்றினை எடுத்துச் சென்றுள்ளனர்.​

இந்நிலையில் இன்று காலை வீட்டினை திறந்த போது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமையடுத்து வீட்டின் உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.​

திருட்டுச் சம்பவத்தின் போது 6 1/2 பவுன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.​மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.