ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, இன்றைய தினம் காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா நடைபெறவுள்ளது.

இம்முறை திருவெம்பாவை மகோற்சவ திருவிழாவை நடத்தாது, ஆலயத்தை பாலஸ்தானம் செய்ய ஒரு தரப்பினர் முயற்சித்ததை அடுத்து , திருவிழா உபயகாரர்கள் சிலரினால் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து , ஆலயத்தினை பாலஸ்தானம் செய்ய மன்று இடைக்கால தடை விதித்ததை அடுத்து திருவிழா இம்முறை சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்கது.