வடக்கு ரயில்வே இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்களை இயக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.