இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 674,813 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 190,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றையதினம் 174,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.