புதிய ஆண்டின் தொடக்கத்தில், தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றத் திட்டமிடுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில், இது வெளிநாடுகளுக்குச் செல்வதை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில்  விலை மற்றும் தரத்தை மதிப்பிடுவதன் மூலம், போர்ச்சுகல் உலகின் வாழ்வதற்கு மிகவும் மலிவான நாடாக கருதப்படுகின்றது.

தட்பவெப்பநிலை, பாதுகாப்பு, குறைந்த வாழ்க்கைச் செலவு மற்றும் வசிப்பிட விசாவைப் பெறுவதற்கான எளிமை ஆகியவை 10 மலிவான நாடுகளின் பட்டியலில் போர்ச்சுகல் முதல் இடத்தைப் பெறுவதற்கான காரணிகளாகும்.

போர்ச்சுகல் தவிர நான்கு ஐரோப்பிய நாடுகளும் இந்த தரவரிசையில் உள்ளன. இந்த நாடுகளின் பட்டியலை இண்டர்நேஷனல் லிவிங் வெளியிட்டது, 

இது ஒவ்வொரு ஆண்டும் அதன் வருடாந்திர உலகளாவிய ஓய்வூதிய குறியீட்டை வெளியிடுகிறது, இது உலக அளவில் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறந்த இடங்களை சேகரிக்கிறது.

சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் மலிவான நாடுகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் குறியீடு வாழ்க்கைச் செலவு, காலநிலை, விசாக்களை எளிதாகப் பெறுதல், வீட்டுவசதிக்கான அணுகல், சுகாதாரம் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

துல்லியமாக பல காரணிகளை மிக விரிவாக மதிப்பிடுவதால் தான், மலிவான நாடுகளின் இந்த பட்டியல் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சிறந்த மற்றும் மலிவான வாழ்க்கையை விரும்புபவர்களுக்கும் பொருந்தும் என்று ஃபோர்ப்ஸ் எடுத்துக்காட்டுகிறது.

இன்டர்நேஷனல் லிவிங்கின் பகுப்பாய்வின்படி, 10 மலிவான (மற்றும் சிறந்த) நாடுகளின் பட்டியல் இதோ

  • Portugal
  • Mexico
  • Panama
  • Ecuador
  • Costa Rica
  • Spain
  • Greece
  • France
  • Italy
  • Thailand