ரஷ்யாவில் சைபீரிய நகரமான மேகனிலிருந்து IrAero நிறுவனத்திற்கு சொந்தமான ஏஎன்26 ட்வின் ட்ராப் சிறிய ரக விமானம் நடுவானில் பயனிக்கும்போது பின்பக்க கதவு திடீரென திறந்து கொண்டுள்ளது.

குறித்த விமானம் 26 பயணிகளுடன் பசிபிக் கடற்கரையில் உள்ள மெகாடன் பகுதி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியில் பயணிகள் பயத்தில் கூச்சலிட்டதுடன் வெளிக்காற்று உள்புகுந்ததால் விமானத்திற்குள் கடுமையான குளிர் வீசியுள்ளது.

பயணிகள் அலறலை கேட்ட விமானி உடனடியாக அருகே உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

விமானம் ட்ரை இறக்கப்பட்டதால் பயணிகள் எந்த அபாயமும் இல்லாமல் உயிர்தப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்தை பயணி ஒருவர் எடுத்த காணொளியாக பதிவு செசெய்ததை அடுத்து குறித்த காணொளி தற்போது வேகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.