யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த 750 ஆம் இலக்க வழித்தட பேருந்து , சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

இதன் போது சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்ற பேருந்துகளை மோதித் தள்ளியுள்ளது. இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.