அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அமெரிக்கா முழுவதும் 35க்கும் மேற்பட்ட சூறாவளிகளை தேசிய வானிலை சேவைகள் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Von Admin