வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த ஒருவரின் மோதிரத்தை கொள்ளையடிக்க முற்பட்டு, அது முடியாமல் போனதும், அவரது விரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்டனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தம்பசிட்டி, பூவக்கரை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மட்டக்களப்பை சேர்ந்த பழனியாண்டி என்பவர், தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த போதே இந்த சம்பவம் நடந்தது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் அவரது விரலில் இருந்த மோதிரத்தை கொள்ளையிட முயன்றனர். மற்றொரு மோதிரத்தை கொள்ளையிட முயன்ற போது, அதனை கழற்ற முடியவில்லை. இதையடுத்து, கைவிரலை வெட்டி, மோதிரத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.