யாழ்.கொல்லங்கலட்டியில் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் 12 பவுண் தாலிக் கொடிகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும்

தெரியவருவதாவது,

வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பின கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த தாலி கொடியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டார் திரும்பி வந்தபோது வீடு உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்ததுடன் தாலிக் கொடி மறைத்துவைத்திருந்த இடத்தை பார்த்துள்ளனர்.

இதன்போதே தாலிக்கொடி கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.