• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

Jan 17, 2023

உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (17) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 2,200 நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், அதற்காக 3 இலட்சத்து 30 ஆயிரத்து 709 பேர் தகுதிப்பெற்றுள்ளனர்.

அவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 109 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகளாவர்.

பரீட்சை அனுமதி அட்டைகளில் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நாளை (18) வரை இணையம் வழியான திருத்திக் கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், விரிவுரைகளை இணையத்தளத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed